Eight Successful Life Story in The World in Tamil - வாழ்க்கையில் ஜெயித்தவர்கள்

Eight Successful Life Story in The World

வாழ்க்கையில் ஜெயித்தவர்கள்



வணக்கம் நண்பர்களே ஏழ்மை நிலையில் பிறந்து பல கஷ்டங்களை கடந்து இப்பொழுது மிகப்பெரிய பணக்காரர்களாக உள்ள 8 பேர் பற்றி இங்கே பார்க்க உள்ளோம். இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் ஓர் புத்துணர்வைக் கொடுக்கும். இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் விருப்பங்களை கட்டுரையின் கீழ் உள்ள கருத்துப் பெட்டியில் ( Comment Box ) பதிவிடவும் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


JK ROWLING


நாம் முதலில் பார்க்க உள்ளது JK Rowling ஐ பற்றி. இவங்கள் எழுதிய ஹரி பொட்டர் புத்தகங்கள் ( Harry Potter Books ) எல்லாம் மிகவும் அதிகமாக விற்பனைக்கு உள்ளானதால் 2004 இல் உலகிலே அதிகமாக உழைக்கும் ஓர் எழுத்தாளராக இருந்தார்கள். அதற்குப்பின்னர் ஹரி பொட்டர் ( Harry potter ) திரைப்படமாக உருவாக்கப்பட்டதன் பின் இவர் மிகப்பெரிய பிரபலமாகவும் மாறினர்.


ஆனால் இவரது சிறு வயதில இவனுடைய அம்மா இறந்து போனது பின்னர் வறுமையான ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க . அதற்குப் பின்னர் இவங்களை கல்யாணம் பண்ணின வரும் சைக்கோ தனமாக ஒரு குழந்தையுடன் விட்டுட்டு போயிட்டர். அந்த நிலையிலே குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசு இல்லாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து விடலாம் என்று கூட நினைத்த இவர்கள் குழந்தைக்காக யாது வாழனும் என்று ஹரி பொட்டர் ( Harry Potter ) கதையினை எழுதியுள்ளார்.


அந்தக் கதையே ஒரு புத்தகமாக வெளியிட நினைத்தபோது 12 Publisher இது எல்லாம் ஒரு கதையா என்று நிராகரித்து உள்ளார்கள். அதற்குப் பின்னர் Barry Cunningham என்ற Publisher இவர்களது கதையினை ஹரி பொட்டர் என்ற புத்தகமாக வெளியிட்டதன் பின்னர் இவரது வாழ்க்கை கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்கு மாறிவிட்டது.


JACK MA


சைனாவில் (China) மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ள ஜாக் மாவின் (Jack Ma) உண்மையான பெயர் Ma Yun . சிறுவயதில் ஆங்கிலம் (English) கற்பதற்காக மட்டுமே 10 Km எக்கு சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவார். காலேஜில (Collage) Final year இல மட்டும் நான்கு வருடங்கள் சித்தி அடையாமல் இருந்துள்ளார். அதற்கு அப்புறம் படிப்பு தான் வரவில்லை காவல்துறையில் யாவது சேரலாம் என்று நினைக்கும் போது அங்கும் இவரை Rejected பண்ணி உள்ளனர். KFC இல் ஒரு சாதாரண வேலைக்கு try பண்ணும் பொழுதும் இவரை Rejected பண்ணி உள்ளனர். இதேபோல் 30 அதிகமான கம்பெனிகள் ஓர் சின்ன வேலையும் கொடுக்காமல் Reject பண்ணி உள்ளனர்.


இவற்றுக்குப் பிறகு 1994 ஓர் ஏஜென்சி ஆரம்பித்து ஜெயித்திருக்கிறார். அதற்கப்புறம் இவரின் நண்பர்களை சேர்த்துக்கொண்டு வீட்டிலேயே ஆரம்பித்த Alibaba.com கம்பெனிதான் இப்பொழுது உலகத்திலேயே 7 பெரிய கம்பெனி ஆக உள்ளது. இதனால் சிறு வயதில் உங்களுக்கு படிப்பு வரலை என்றாலோ! மற்றவர்கள் உங்களை நிராகரித்தாலும்! மனசு உடைந்து விடாதீர்கள்.


BILL GATES


இப்பொழுது Microsoft Owner Bill Gates இன் சொத்து மதிப்பு $105,000,000,000 தாண்டி போய்க் கொண்டுள்ளது. 2018 வரைக்கும் இவர்தான் உலகத்திலேயே No 1 பணக்காரராக இருந்தாரு. இப்ப வரைக்கும் இவர் நடத்திக்கொண்டு உள்ள Bill Melinda gates என்று Foundation தான் உலகத்திலேயே மிகப்பெரிய Privet Foundation ஆகவும் உள்ளது. அந்த அளவுக்கு ஏழை மக்களுக்கு உதவுகின்ற மிகப் பெரிய மனிதராக வாழ்ந்து கொண்டு உள்ளார்.


ஆனால் இவரின் சிறுவயதில் ஸ்கூல் (School) படிக்கும் பொழுது பாடசாலை கணணியை Hack ஹேக் செய்து இவரது வகுப்பில் இவர் மட்டும் பையனாக உள்ளதுபோல் மாற்றியுள்ளார். அதற்குப்பின் 1997 இல்ல போக்குவரத்து வன்முறை செய்தபடியால் இவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். சிறுவயதில் இதுபோல் தப்புக்கள் செய்தவர்தான் இன்று பல மக்களுக்கு உதவுகின்ற மிகப் பெரிய மனிதராக வாழ்ந்து கொண்டுள்ளார். அதனால் சிறுவயதில் ஏதும் தப்பு பண்ணி விட்டாள் அத்துடன் நமது வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைத்து விடாதீர்கள். செய்த தப்பை உணர்ந்து மறுபடியும் தப்பு பண்ணாத படி இருந்தாலே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.


JEFF BEZOS


2018 இல் Bill Gates ஐ பின்னுக்குத்தள்ளி Jeff Bezos உலகத்திலேயே No 1 பணக்காரராக ஆனாரு. இப்ப வரைக்கும் இவரின் அமேசான் (Amazon) கம்பெனி தான் உலகத்திலேயே மிகப்பெரிய Online Store ஆக உள்ளது.


ஆனால் இவரின் சிறுவயதில் படிப்பதற்கு கூட பணம் இல்லாமல் ஓர் Fast Food கடையில் பகுதி நேர வேலை செய்து கொண்டுதான் படித்தார். வேலை பார்த்துக்கொண்டு படிக்கும் பொழுதும் பள்ளிக்கூடத்தில் இவர்தான் முதலாவது மதிப்பெண்ணை பெறுவாராம். ஆனாலும் இவருக்கு முதலில் வங்கியில் சாதாரண வேலைதான் கிடைத்ததா அதற்கு அப்புறம் 1994 அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் Car park இல் அமேசான்9 Amazon.com என்ற Online store ஐ உருவாக்கியுள்ளார். அந்த சமயத்தில் ஓர் மேசைணை வாங்குவது கூட பணம் இல்லாமல் வீட்டிலிருந்த ஓர் கதவினை கழற்றி மேசையாக பயன்படுத்தியுள்ளார்.


1999 போர் செய்தியில் தனது அப்பா கூட இந்த வேலை சரிவராது மறுபடியும் வங்கிக்கு வேலைக்குப் போகச் சொல்லி உள்ளார். ஆனால் இவர் தனது தன்னம்பிக்கையுடன் அமேசான் இணை ஆரம்பித்ததால் இன்று உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய Store ஆக உள்ளது.


JAY Z


2019 இல்ல இவர்தான் உலகத்திலேயே முதல் Billionaire Rapper ஆனாரு. இப்பொழுது மிகப் பெரிய பணக்காரராக உள்ள இவர் சிறு வயதினில் இவர் படாத கஷ்டங்களே கிடையாதாம். 12 வயதினிலே இவரின் தந்தை யார் இறந்துபோனதன் அப்புறம் இவரின் அன்னர் போதைக்கு அடிமையாகி துப்பாக்கியினால் கையிலே சுட்டுள்ளார். இவரும் வறுமையினால் பணத்திற்காக போதைப் பொருட்கள் விற்பது, ரவுடிசம் பண்றது என்று நிறைய தப்புகள் செய்துள்ளாராம்.


மிக மோசமான இடத்தில் பிறந்து கஷ்டப்பட்டாலும் இவருக்கு பாடசாலையில் நல்ல நண்பர்கள் கிடைத்ததனால் சிறுவயதிலிருந்தே இவரின் Rapping திறமையினை விடாமல் முயற்சி செய்து கொண்டே இருந்த படியினால் நிறைய போராட்டங்களுக்கு அப்புறம் இவர் மிகப்பெரிய கோடிஸ்வர Rapper ஆக உள்ளார். அதனால் நல்ல நண்பருடன் பழகினாலே நமது வாழ்க்கை நன்றாக இருக்கும்.


RICHARD BRANSON


இப்பொழுது இவர் Virgin Group என்ற பெயரில் 400 க்கும் அதிகமான கம்பெனிகளை Successful ஆக நடத்திக்கொண்டு உள்ள மிகப் பெரிய தொழில்அதிபராக உள்ளார். ஆனால் இவர் சிறுவயதில் இவருக்கு சுத்தமாக படிப்பே வராதாம். இவர்தான் வகுப்பிலேயே கடைசி மாணவனாம். அதுவும் வறுமையினால் லண்டனில் உள்ள சிறிய வீட்டில் பேஸ்மென்ட் இல்தான் வந்துள்ளாராம். அதற்கு அப்புறம் கஷ்டப்பட்டு சேமித்த காசை வைத்து கிறிஸ்மஸ்ற்கு கிறிஸ்மஸ் மரத்தினை வாங்கி விற்பனை செய்துள்ளார். ஆனாலும் அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுக்கப்புறமும் கஷ்டப்பட்டு பணம் சேமித்து Love Birds வாங்கி விற்பனை செய்துள்ளார் அதுவும் மிகப்பெரிய நஷ்டம் தான் அவருக்கு கிடைத்தது.


ஆனால் இவரின் விடா முயற்சியினால் அதற்குப் பின்னர் ஆரம்பித்த மேகசின் கம்பெனியில் இருந்து விமான கம்பெனி வரைக்கும் எல்லாமே வெற்றிதானாம். அதனால் ஏற்படுகின்ற தோல்விகளை கண்டு சரிந்து விடாமல் விடாமுயற்சி இருந்தால் தோல்விகள் நம்மை கண்டு பயந்து ஓடி விடும் வெற்றி உங்களை தேடி வரும்.


ELON MUSK


இப்பொழுது இவரின் கம்பெனி மதிப்பு $23,000,000,000 தாண்டிப் போய்க் கொண்டு உள்ளதாம். ஆனால் சிறுவயதில் இவர் படித்த பாடசாலையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார். இவரின் தலையினை கழிவறையில் உள் முக்கி கூட கஷ்டப்படுத்தி உள்ளார்களாம். ஒருநாள் இவரை பாடசாலை மாடியில் இருந்து தள்ளி விட்டதில் இவருக்கு மூன்று தையல்கள் போட்டுள்ளார்கலாம். ஆனால் இவர் படிப்பை மட்டும் நிறுத்தவே இல்லையாம்.


படித்து முடிந்ததன் பின் இவரின் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த PayPal கம்பெனி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதற்குப் பின்னர் இப்பொழுது பேட்டரியில் ஓடும் கார் முதல் விண்வெளிக்கு அனுப்பும் பேசிப் வரை தயாரிக்கின்ற ஓர் கோடீஸ்வரராக உள்ளார்.


EVEL KNIEVEL


இவர் தனக்குப் பிடித்த மோட்டோ பைக் சாகசம் ( Motorbike Jumping ) பிடித்த அளவுக்கு இதுவரை யாரும் தனக்குப் பிடித்ததை செய்திருக்க மாட்டார்கள். இவர் இதுவரைக்கும் மிகவும் ஆபத்தான 80 சாகசங்களை செய்து இவருக்கு 431 முறை எலும்புகள் உடைந்து உள்ளன. ஒரு தடவ கோமா விற்கும் சென்று மீண்டு வந்துள்ளார்.


என்னதான் பெயரோ, புகழோ, பணமோ சாதித்தாலும் தனக்குப் பிடித்த Bike jumping ஐ நிறுத்தவே இல்லையாம். இதனால் இவர் தனது உடம்பில் உள்ள எலும்புகளை 431 தடவைகள் உடைத்ததனால் Most Broken Bones In a Lifetime என்ற World records இணை வாங்கியுள்ளார்.


எப்பொழுது எல்லாம் நமது வாழ்க்கையில் கஷ்டங்களும், சோதனைகளோ ஏற்படுகின்ற பொழுது தன்னம்பிக்கையுடன் அந்த நிலைமையை சமாளித்து விட்டால் போதும். கண்டிப்பாக நமக்காக நிறைய வெற்றிகள் காத்துக்கொண்டு இருக்கும். ஓகே நண்பர்களே இந்தக் கட்டுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கீழுள்ள கருத்துப் பெட்டியில் ( Comment Box) பதிவிடவும். இது உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளவும்.


***நன்றி வணக்கம்***

கருத்துரையிடுக

0 கருத்துகள்