ஜெயிலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு! தொடர் தோல்வியில் இருந்து மீளுமா உச்ச நட்சத்திரம்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக முன்னணி ஹீரோவாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் இவர் தான். அது மட்டுமல்லாது பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் வலம் வந்தவர் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவின. அண்ணாத்த மற்றும் தர்பார் படங்களின் தோல்வியை தொடர்ந்து தனது புதிய படங்களில் மிகவும் கவனம் எடுத்து நடித்த வருகிறார் சூப்பர் ஸ்டார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வில்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருந்த ஜெய்லர் திரைப்படம் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி காரணமாக ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட பின்னடைவால் இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஒரு சில திரை உலகினார் கருத்து தெரிவித்து வந்தனர்.
தற்போது ஜெயிலர் திரைப்படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஜெய்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகிவிட்டதாக தெரிகிறது. இதற்கு முன்பு ஜெய்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று செய்திகள் பரவினாலும் அதன் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் எதுவும் வராத நிலையில் தற்போது ஜெய்லர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்திருக்கிறது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் நிலவும் உறுதியான தகவல்களின் அடிப்படையில் ஜெய்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
0 கருத்துகள்