பொன்னியின் செல்வன் நாவலுக்கு நியாயம் செய்ய தவறிய மணிரத்தினம்!
Ponniyin Selvan Part II |
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், விக்ரம் பிரபு, சோபிதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வனின் முதலாவது பாகம் வெளியாகி சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து வெளியாகிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
ஆயினும் வெளிநாடுகளில் அது வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது. மணிரத்தினம் கல்கி எழுதிய நாவலின் சில முக்கியமான விடயங்களை மாற்றி அமைத்துள்ளார். குறிப்பாக ஆதித்த கரிகாலனை யார் கொன்றார் என்பதற்கு எந்த ஒரு வரலாற்று சான்றும் இல்லாததால் அதையே நாவலிலும் புகுத்தி இருப்பார் கல்கி ஆனால் மணிரத்தினம் ஆதித்த கரிகாலனே விரும்பி நந்தினியின் கைகளால் மரணிப்பதாக காண்பித்திருப்பார் மேலும் மக்களால் விரும்பப்பட்ட மணிமேகலை காப்பாத்திரம் தவிர்க்கப்பட்டமையும் பூங்குழலியின் முக்கியத்துவம் காட்டப்படாமையும் சேந்தன் அமுதன் மற்றும் மதுராந்தகன் இடையிலான தொடர்பு கதையில் உள்ளது போல் அல்லாது சாதாரணமாகவே மணிரத்தினம் அதை கையாண்ட விதம் போன்ற குறைபாடுகளால் நாவலை வாசித்த வாசகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் பகிரப்படுகின்றன.
இருப்பினும் கார்த்தி மற்றும் திரிஷா இடையிலான காதல் காட்சிகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் இருவரினதும் அபாரமான நடிப்பும் படத்தை தாங்கி நிற்கின்றது. இதுவரது காட்சிகள் கொஞ்சம் ராவணனை நினைவு படுத்தினாலும் அவர்களின் ஜோடிப் பொருத்தம் பார்வையாளர்களை கவர்ந்து செல்லுகிறது. அனைத்து நடிகர்களும் தத்தமது வேலைகளை சிறப்பாகவே செய்துள்ளனர். அற்புதமான ஒளிப்பதிவு பிரம்மாண்டமான காட்சி அமைப்பு அனைத்தும் இருந்தும் வாசகர்களை கவர தவறியது பொன்னியின் செல்வன் பாகம் 2...........
0 கருத்துகள்