நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்

நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இலகுவான முறையில் இதனைப் போக்குவதற்கு இந்த வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்


Do you suffer from bad breath Follow these steps
Do you suffer from bad breath? Follow these steps

என்னதான் உறவினர்கள் அல்லது உயிர் நண்பனாக இருந்தாலும் அவன் உரையாடும் பொழுது வாயைத் திறந்தாலே துர்நாற்றம் வீசுகிறதா? அல்லது நீங்கள் சிலருடன் உரையாடும் பொழுது அவர்கள் உங்களுக்கு " உன்னுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது தள்ளிப்போ " இவ்வாறு கூறினால் உங்கள் நிலைமையை பாருங்கள். இதனால் மற்றவர்களுடன் வாய் திறந்து கதைப்பதற்கு தயக்கம் கொள்கிறீர்களா?. இது அனைத்துக்கும் காரணம்" வாய் துர்நாற்றம்"!!!

ஏன் இவ்வாறு வாய் துர்நாற்றம் வருகின்றது என்று பார்ப்போம். நாம் உண்ணும் உணவுகள் தான் இந்த வாய் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. வெங்காயம், பூண்டு போன்றவை வாய் துர்நாற்றத்தை உருவாக்க முக்கிய பங்கு இருக்கின்றது. வெங்காயத்தினை உரிக்கும்போது அது சில வாயுவை வெளியிடுகின்றது இதனால் வருகின்ற பக்டீரியா துர்நாற்றத்தை உருவாகும். வெங்காயம் சமிபாடு அடையும் பொழுது அதனுடைய மூலக்கூறுகள் நுரையீரலை அடைந்து நமது உடலில் ரத்தத்துடன் கலப்பதனால் துர்நாற்றத்தை வெளிவிடுகிறது.

வெங்காயம், பூண்டு உண்டதன் பிற்பாடு வருகின்ற துர்நாற்றத்தை எவ்வாறு தடுப்பது. பூண்டு, வெங்காயம் உண்பதன் பிற்பாடு பாலினை பருகி வருவதால் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம். இதேபோல் எலுமிச்சம்பழமும் சிறந்த தீர்வினை கொடுக்கின்றது. எலுமிச்சையில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்களை சிறப்பாக அழிக்கின்றது. சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றை நீரில் கலந்து வாயினை கொப்பளித்து வரலாம் மற்றும் இந்த கலவையினை குடிப்பதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் அகற்றப்படும்.

Do you suffer from bad breath?
Follow these steps !!!

நமது வாயில் உள்ள அமிலத்தன்மையை சமநிலையில் பெறுவதற்கு பேக்கிங் சோடா சிறந்த பங்கு வலிக்கின்றது. இதிலுள்ள கார, அமிலத்தன்மையை இதற்கு காரணமாகும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் உடனடியாக போக்குவதற்கு கொத்தமல்லி இலைகளை மென்று பாருங்கள். உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகின்றது என்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக கொஞ்சம் சர்க்கரையை போட்டு மெல்ல ஆரம்பியுங்கள் இதுவும் உடனடி தீர்வாக அமைகின்றது. இவற்றைப் போல் ஆப்பிள் பழ ஜூஸ் உம் ஒரு நல்ல பலனை தருகின்றது.

நீங்கள் உரையாடும் பொழுது உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது என்று உங்களுக்குப் தெரிந்தால் நான் இங்கு கூறியவற்றை செய்ய ஆரம்பியுங்கள். ஒரு நல்ல பலனை இது தரும். இதேபோல் உங்கள் நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் அவர்கள் உரையாடும் பொழுது இவ்வாறு துர்நாற்றம் வீசுகின்றது என்றால் அவர்களுக்கு இவ்வாறு உடனடி தீர்வைத் தரும் சில தீர்வுகளை எடுத்துரையுங்கள்.

அனைவருடனும் சிரித்து நன்றாகப் பேசுவதற்கு இவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். முயற்சி செய்து பாருங்கள் நல்ல ஒரு பலனை பார்ப்பீர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்