புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு அம்மா தன் மகனுக்கு கூறும் சில அறிவுரைகள்.
Mother Gives To Advice Her Son |
மனைவியை அம்மாகூட எந்த நிலையிலும் ஒப்பிட்டு பார்க்க கூடாது...!!!
அன்பான மகனே மறைந்தும் கூட மனைவியை என்கூட ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். 30 ஆண்டு காலம் குடும்ப வாழ்கையில் அனுபவம் இருக்கு உன் அம்மாவுக்கு, ஆனால் உன் மனைவி உன்னை போலவே இந்த வாழ்க்கைக்கு புதுசு என்றதை நினைவில் வைத்துக்கொள்ள.
நான் உன்னை பார்த்து பார்த்து வளர்த்தது போல தான் அவங்க அம்மாவும் அவளை வளர்த்து இருப்பர்கள். அவளுக்கு சிறுது காலம் தேவைப்படும். அதன் பின்னர் உன்னுடைய குழந்தைகளுக்கு சிறந்த அம்மாவாக அவள் இருப்பாள்.
மனைவி உனக்கு அம்மா இல்லை, அவள் உனக்கு ஒரு நல்ல தோழி...!!!
என் அன்பு மகனே, உன் மனைவி உன் அம்மா இல்லை. உன் வாழ்கையை உன்னுடன் பகிர்ந்துகெள்ள வந்துள்ள ஒரு தோழி.
உன் அம்மாவுக்கு உன்னை நன்றாக கவனிப்பது மட்டும் தான் முதல் வேலையாக இருக்கும் ஆனால் உன் மனைவியை நீ தான் நன்றாக கவனிக்க வேண்டும்.
நீங்கள் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றாக புரிந்து மாறி மாறி கவனிச்சு அன்பு செலுத்துவது தான் மிக முக்கியம்.
மனைவியானவள் மதிக்கப்பட வேண்டும்..!!!
அன்பு மகனே, உன்னுடைய இந்த வாழ்க்கையில் நல்லது கெட்டது, ஏற்றத்தாழ்வு என்று அனைத்திலும் உன்கூட இருக்க போகிறவள் உன் மனைவி. உன்னுடைய எல்லா முன்னேற்றப்படியிலும் உன் மனைவியின் பங்கு உள்ளது. அகவே அவளை மதிக்கவேண்டும். உன்னுடைய கருத்துகளை அவளிடம் கூறி அவளின் கருத்துகளை கேட்டும், அவளின் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து மகிழ்ச்சிகரமான இருடா..!!!
திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்த உன் மனைவியை உன் வீட்டில் இயல்பாக உணர வைக்க வேண்டியது அவசியம்
பிறந்து சின்ன வயதில் இருந்து வளர்ந்த பிறந்த வீட்டை வீட்டு நமக்காக புகுந்த வீட்டுக்கு வந்திருக்காள் அவள். அவளை இது அவள் வீடுபோல உணர வைக்க வேண்டும். நீ தான் அதை அறிந்து செயல்பட வேண்டும்.
மனைவி நீ எப்பொழுதும் காதலிக்க வேண்டும்
காதலிப்பதற்கு வயசு ஒரு பெரிய விடயமே இல்லடா.. உன் மனைவியை நீ எப்பொழுதும் காதல் செய்து சந்தோஷமாக வைத்துக் கொள்.
உன் மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது, சின்ன சின்ன பரிசுகளை சர்ப்ரைஸாக கொடுப்பது, இரண்டு பேரும் சந்தோசமாக கதைத்து பேசி வாய்விட்டு சிரித்து வாழ்க்கையினை கொண்டு செல்வது போன்ற விடயங்கள் உங்கள் இருவரையும் இளமையாக உணர வைக்கும்.
இறுதியாக ஒன்று சொல்கின்றேன்டா...!!!
உன்னுடைய அப்பா ஒரு நல்ல அப்பா. அவர் என்னை எவ்வாறு நடத்தினார் என்று உனக்கு நன்று தெரியும். அதுபோல் நீயும் உன் மனைவியினை மதிச்சு குடும்பத்தில் நடத்த பழகிக் கொள் மகனே....!!!
எனக்கு மருமகளாகவும், உனக்கு மனைவியாகவும் வந்துள்ளவளுக்கு என் அன்பு வாழ்த்துக்களும், என்னுடைய பிரார்த்தனைகளும்.
திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து மணமகன்களுக்கும் இந்தத் தொகுப்பு சமர்ப்பணம்..
0 கருத்துகள்