History of Singapore
சிங்கப்பூரின் வரலாறு
Part 01
![]() |
| History of Singapore in Tamil |
இலங்கையை முன்னுதாரணமாக கொண்டு 1960 களில் இலங்கையை பார்த்து வியந்து அது போன்று தானும் ஆக ஆசைப்பட்ட குட்டித் தீவு தான் சிங்கப்பூர். எம்மோடு இருந்து எமது வளங்களை சுரண்டாதீர். தனியே பிரிந்து போய் விடுங்கள் என்று மலேசியாவால் தனியே புறந்தள்ளப்பட்ட அதன் தெற்கு கரை தீவு இது. இன்று உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச வளர்ச்சியுடன் தூய்மையாக சீரிய ஒழுங்கமைப்பின் சிகரமாக விளங்கும் நாடு சிங்கப்பூர்.
சிங்கப்பூர் தீவுதான், ஆனால் அழகான துறைமுகம் இயற்கையாய் அமையப் பெற்றிருந்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷ் துரிதமாய் நாட்டை வளர்க்க தொடங்கினர்.
இயற்கையாக கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுவதில் பிரிட்டிஷ் நாட்டவரை மிஞ்ச யாரும் இல்லை எனலாம், அவர்களின் தொலைநோக்கு பார்வை , சிந்தனைகள் அப்படியானவை. இந்தியாவின் மாநகரங்களில் ஒன்றான பம்பாய் தீவினை அவ்வாறான ஒரு தொலைநோக்கோடு உருவாக்கினார்கள், அந்த யுத்தி வெற்றியடைந்தது. இன்று இந்தியாவிலேயே அதிக பணம் புழங்கும் இடம் அது.
தற்போதைய மலேசியாவாகிய அன்றைய மலேயாவில் மழை கிடைக்கும்,மலை வளமும் உண்டு. மலையில் அரிசி விளைவிக்க முடியாது. தேயிலை விளைவிக்க வேண்டுமெனில் பனிவேண்டும், அதுவும் இல்லை. என்னதான் செய்ய முடியும் அந்த இடத்தில்?. அப்போது ரப்பர் தான் அவர்களுக்கு கைகொடுத்தது. ரப்பர் விளைவித்தால் அதிகாலையில் தோட்டத்திற்கு சென்று பாலெடுக்கவேண்டும், அதற்கு தொழிலாளர் அதிகம் தேவை. மலேய மக்கள் தொகையும் அவ்வளவு இல்லை.
இந்திய தமிழக மக்களோ பல சிக்கலில் சிக்குண்டு இருந்தனர். நாயக்க மன்னர் ஆட்சி வீழ்ச்சியோடு வெள்ளையர்கள் வரி என பணத்தை சுரண்ட, விவசாயமும் வீழ்ச்சியடைந்து அதனால் வறட்சி என ஏகப்பட்ட பிரச்சனைகளால் எங்காவது தப்பி ஓட வேண்டிய நிலையில் காணப்பட்டனர். இவைகளுக்கு அப்பால் வெள்ளையர்கள் ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு வந்தது போல , தமிழகத்தில் ஜாதி, மதம் என சொல்லி வேற்றுமைகளை உண்டாக்கி உலகெங்கும் அடிமையாய் கொண்டு சென்றான். அப்படியாக தமிழர் கூட்டம் ரப்பர் காடு வேலைக்கும் இங்கு வந்து குடியேறினர்.
மலை,மழையை தாண்டி அடுத்த முக்கிய வளமாக தாதுமணல் மலேயாவில் உண்டு, ஆனாலும் சுரங்கத்தில் வேலை செய்ய பணியாளர்கள் தேவை. ஏற்கனவே ஆபிரிக்க அடிமைகளை மேற்கு இந்தியா,அமெரிக்கா என கொண்டுபோய் விற்று விட்டனர். தொழிலாளர்களை கொண்டு வர வேறு ஆபிரிக்க கண்டமும் இல்லை. அமெரிக்காவில் கறுப்பின அடிமைகளை மனிதர்களாக ஆப்ரகாம் லிங்கன் அறிவித்துவிட்டார், இனி ஆபிரிக்க அடிமை முன்பு போல் கிடைக்கமாட்டான். அந்த சூழ்நிலையில் சீன அரசும் உள்நாட்டு கலவரங்களால் குழப்பத்தில் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய பிரிட்டன், உங்கள் சீன அரசனுக்கு அடிமையாய் இருப்பதை விட மலேயாக்கு வந்து தாதுமணல் சுரங்கத்தை பிரிட்டிஷின் மக்களாய் சுதந்திரமாய் தோண்டுங்கள் என அறிவித்தது. இந்த அறிவிப்பால் பெரும் கூட்டம் மலேயாவிற்குள் உள்நுழைந்தது. அவ்வாறு வந்த குடிமக்களில் நான்காவது தலைமுறையில் சிங்கப்பூரில் பிறந்த ஒருவர்தான் லீ குவான் யூ.
மலேயாவின் சொத்தான ரப்பரும் தாதுமணலும் ஏற்றுமதி செய்யும் முக்கியதுறைமுகமாக சிங்கப்பூரினை உருவாக்கினார்கள் வெள்ளையர்கள். அதன்பின் பொருளாதார ரீதியாக வேகமாக வளர ஆரம்பித்தது சிங்கப்பூர்.
நன்றாக வளர்ந்து வந்த சிங்கப்பூரின் தலைவிதி இரண்டாம் உலகப் போரில் தலைகீழாக மாறியது, அதாவது ஜப்பான் மொத்த மலேயாவையும் பிடித்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்பொழுதுதான் சிங்கப்பூர் துறைமுகம் எவ்வளவு கேந்திர முக்கியத்துவம் உள்ளது என உலகமே விளங்கிக் கொண்டது.
ஹிட்லரை வீழ்த்தியபின்னரும் அடங்காத ஜப்பான், ஜேர்மனியின் அணுகுண்டால் தோற்கடிக்கபட்டபின் கண்ணீரை துடைத்தபடி சிங்கப்பூரை விட்டு வெளியேறியது. மறுபடியும் சிங்கப்பூரை தன்வசமாக்கிய பிரிட்டன் தந்திரமாக அதனை தன்னாட்சி பகுதி என அறிவித்து கொண்டது. அதாவது 1957இல் மலேசியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும், சிங்கப்பூர் பிரிட்டனின் காலணிநாடாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் மக்களின் நலனுக்காகவென ஒரு கட்சி இருந்தது, அதன் தலைவராக அப்பொழுது லண்டனில் பாரிஸ்டர் படிப்பு முடித்திருந்த லீ குவான் யூ தெரிவு செய்யப்பட்டார், மிகவும் சுறுசுறுப்பானவர், எல்லா விடயங்களிலும் கண்டிப்பானவர் என்றெல்லாம் அறியப்பட்டிருந்தாலும் அவரின் இனநல்லிணக்கமும், மலேயாவுடன் இணைந்திருக்க அவர்காட்டிய அக்கறையும்,ஆர்வமும் அவரை அனைவராலும் கவனிக்க வைத்தது.
1960களில் பிரிட்டன் சாம்ராஜ்யம் இருண்டு விடியாத இரவினை எதிர்நோக்கியது. சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியமான பிரிட்டன் சுக்குநூறாக உடைந்து போனது. உலகவல்லரசாகும் போட்டியில் தோற்று நின்ற பிரிட்டனை அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரிட்டனை பந்தாடின. அவ்வளவு ஏன்? சூயஸ் கால்வாய் தொடர்பான பிரச்சினையில் அரபுகளின் தலைவர் கர்ணல்நாசரே "ஒழுங்கா சோலிய பாரு" என நமது ஊர் ஸ்டைலில் சொல்வது போல பிரிட்டனை ஏளனமாக பார்த்தார். ஒன்றும் செய்ய வழியின்றி அழுத பிரிட்டன், உலக அரசியலில் இருந்து தானே ஒதுங்க தொடங்கி, சிங்கப்பூருக்கும் விடுதலை வழங்கியது.
மொத்த சிங்கப்பூரின் நம்பிக்கை நட்சத்திரமாக லீ குவான் யூவினை மக்கள் நம்பதொடங்கினர். அவரின் மலேயாவோடு இணைவோம் என்ற கோஷமே அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. அவர் உலகினை நன்கு அறிந்தவர், மத வேற்றுமையால் இந்திய பிரிவினை ஏற்பட்டதை எல்லாம் கண்டவர், மதப்பிரிவினையோ, சாதிப்பிரிவினையோ மக்களை முன்னேற்றாது என்பது அவரின் நம்பிக்கை. அதனால் தாய்நாடான மலேயாவோடு சிங்கப்பூரை ஒன்றாக இணைத்தார்.
ஆனால் நாட்டு நிலமை சுமூகமாக இருந்தாலும் சில சிக்கல்கள் இடையிடையே எழுந்தன, அன்றைய மலேயா பின் மலேசியா என பெயர் மாறியது. இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வாழும் நாடு மலேசியா. இனத்தால் பிரச்சினை அல்ல எனினும் ஒரு சில முரண்பாடுகள் உருவாயின. அது வெள்ளையர் காலத்தில் போடப்பட்ட விதை.. அது முடக்கப்பட்டிருந்தாலும் மெல்லிய முரண்கள் வேர்விட்டபடி இருந்தன. இதனால் மலேசிய அரசாங்கம் கொஞ்சம் அதிருப்தியடைந்து, சிங்கப்பூரை மறுபடியும் தனிநாடாக விடலாம் என முடிவெடுத்தார்கள், உடனடியாக அதனை அறிவித்தும் விட்டார்கள். உலக வரலாற்றிலே ஒரே ஒரு முறையாக, ஒரு நாட்டிற்கு கத்தியின்றி, ரத்தமின்றி போராட்டமின்றி சுதந்திரம் நடந்த அதிசயம் அன்றுதான் நடந்தது.
தொடர்ச்சி ........
👉 நன்றி வணக்கம் 👈

0 கருத்துகள்