Do you breathe life into your speech? - உங்கள் பேச்சில் உயிர் மூச்சுண்டா?

Do You Breathe Life Into Your Speech?
உங்கள் பேச்சில் உயிர் மூச்சுண்டா?


Do you breathe life into your speech? - உங்கள் பேச்சில் உயிர் மூச்சுண்டா?
Do you breathe life into your speech?


நீங்கள் உரையாடும் பொழுது அசட்டை செய்யப்பட்டு உள்ளீர்களா? உங்களது பேச்சை எல்லோரும் அலட்சியம் செய்கின்றார்களா? அதன் விளைவாக தாழ்வு மனப்பான்மை உங்களை வாட்டுகின்றதா ? கவலையை விட்டொழியுங்கள்! உங்கள் குரலோசையின் மகத்துவம் உங்களுக்கு புரியவில்லை.


நீங்கள் எவ்வித குரலோசை உடன் பேசுகின்றீர்கள்? எவ்வாறு உரையாடலை மேற்கொள்கின்றார்கள் என்பதிலேயே உங்கள் " இமேஜ்" தங்கியிருக்கின்றது. உங்கள் குரலை இனிமையானதாக திருத்தி எவரையும் இலகுவில் வசீகரிக்கும் வண்ணம் பேசப்பழகுவது சாத்தியம். இதற்கு தகுந்த விஞ்ஞானரீதியான நவீன " பேச்சொலி பயிற்சி முறைகள்" உண்டு. சுய நம்பிக்கையுடன் முயற்சியை மேற்கொள்ளுங்கள் அபார சாதனை புரிந்து விடலாம்.


உலகின் பிரபல ஜனாதிபதிகள், சூப்பர் ஸ்டார்களின் தகமைகளை படித்துப் பாருங்கள். அவர்களது சிம்மக் குரலே அவர்கள் உச்சத்தைத் தொடுவதற்கு துணை புரிந்து இருக்கின்றது. பல பதவி உயர்வு பெறவும், பெரும் புள்ளியாக சமுதாயத்தில் உயர்வு பெறவும், பிரபலமாவதற்கும் இவர்களுடைய பேச்சு திறமையே பெரிதும் துணை புரிந்துள்ளது.


You Can Reach The Pinnacle If You Handle Your Voice Smoothly As You Climb The Ladder To Become Famous!


உங்கள் குரலோசையே உங்களது விலைமதிப்பற்ற சொத்தாகும். ஆறுதலாக, அமைதியாக, இனிமையாக, அழகாக உரையாட கற்றுக்கொள்ளுங்கள். இதற்காக சேர்க்கையாக குரலை மாற்றி பேசுங்கள் என்று நாம் கூற வரவில்லை. காதுகொடுத்துக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் வண்ணம் பேசப் பழகுங்கள். ஆனால் உங்களுடைய குரலினை மாற்றிப் பேசப்படுவது இலகுவானது அல்ல முயன்ற அளவு பயிற்சியினை எடுத்துக் கொள்ளுங்கள்.


எனவே எவ்வித பயிற்சியையும் ஆரம்பிக்கும் முன்பாக சிலவற்றை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சில பெண்கள் தங்களுடைய குரலினை தாழ்த்திப் பேசப்பழகுவதநாள் இயல்பாகவே ஓசை இனிமையானதாக இருக்கும் வாய்ப்பினை பெற்று உள்ளார்கள். எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் பழக்கம் இங்கு பலரின் உள்ளது. மலையே சரிந்தாலும் நிலைகுலைய உறுதியை கடைப்பிடியுங்கள். அமைதியாக, அழகாக பேச பயிற்சி செய்துவாருங்கள். நாளடைவில் உங்களுடைய குரல் சிம்மக்குரல் ஆக மாறிவிடும்.


உங்களை தாழ்த்தவும், உயர்த்தவும் உங்கள் குரலுக்கு வலிமை உண்டு. நீங்கள் உலகில் தலைசிறந்த விவேகியாக, அறிவாளியாக, அழகியாக இருக்கலாம். இருப்பினும் உங்கள் குரல் ஒலி இங்கு குறிப்பிட்ட குணாதிசயங்களை வெளிக்கொணர தவறினால் அனைத்தும் உங்கள் கை நழுவிப் போய்விடும். பதவி உயர்வில் நீங்கள் புறக்கணிக்கப்படலாம், சபை நடுவே நீங்கள் அலட்சியப்படுத்தபடலாம். உங்கள் பேச்சு கவரத் தவறி விடுகிறது. இதன் காரணத்தை நன்கு அலசி ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். திடீரெண்டு உங்கள் குரலை சீன் படுத்துவதாக நினைத்துக் பிரபல நடிகரையோ அல்லது பிரபல பேச்சாளரையோ பிரதி பண்ணி பேச தொடங்கி விடாதீர்கள். குரலோசை ஆனது சொந்தமானதாகும், இயல்பானதாகவும் அமைத்தல் மிக முக்கியம் ஆகின்றது.


பிறருடன் உரையாடலை மேற்கொள்ளும் பொழுது பயத்தினை விடுவித்து தைரியமாக உரையாடபழகுங்கள். உங்களுடைய முகத்தில் உணர்ச்சிகளை காட்டுங்கள். தேவை ஏற்படும் இடத்தில் ஒரு புன்னகையை உதிர்க்கவும், வதனத்தில் சிரிப்பினை உதிக்கவிடவும் தயங்காதீர்கள். உங்கள் கண்களும், முகபாவங்களும், அங்க அசைவுகளும் தங்களுக்கென்று தனி ஒரு மொழியினை வைத்திருக்கின்றன. உங்கள் உரையில் இவற்றை இணைத்து உரையாட பழகுங்கள் வெற்றி நிச்சயம்!


ஒரு வசனத்தை உச்சரிக்கும் முறையிலிருந்து தான் அதன் அர்த்தத்தைப் பிறர் புரிந்து கொள்கின்றார்கள். உதாரணமாக " நான் விவாகம் செய்து கொள்ளப் போகின்றேன் " என்று நீங்கள் உங்கள் நண்பருக்கு கூறினால் அதன் அர்த்தங்களை பின்வருமாறு எடுத்துக் கொள்ளலாம்.


  • நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்- நான் மிக விரைவில் அடுத்த ஓரிரு மாதங்கள் விவாகம் செய்து கொள்ளப் போகின்றேன்.
  • நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்- நான் விவாகம் செய்துகொள்ள இருந்தாலும் எந்தப் பெண்ணைத் தெரிந்தெடுப்பது என்பது பிரச்சினையாக இருக்கிறது.
  • நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன் - நான் விவாகம் செய்ய விரும்பினாலும் என்னை எந்தப் பெண்ணாவது மணம்முடிக்க முன் வருவாளா?


எனவே உரையாடும் வேளைகளில் அர்த்தம் தெரிந்து பேசுங்கள். கீச்சுக் குரலில் மெதுவாகப் பேசுவது, " ம் " முணுமுணுப்பது, மூக்கால் பேசுவது, கைவிரல்களால் வாய் பகுதியை மறைத்துக் கொண்டு பேசுவது போன்ற கெட்ட சுபாவங்களை கூடிய விரைவில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.


சபை நடுவே மேடைப் பேச்சுக்கு அழைக்கப்பட்டால் பயம் அறியாமல், எனக்குத் தெரிய வேண்டிய விடயங்கள் எல்லாம் தெரியும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன், மேலும் பேச எடுத்துக்கொண்ட விடயம் எனக்கு நன்றாகத் தெரியும், அதில் சபையோர் அறிவு 0 என எண்ணிக்கொண்டு பேச ஆரம்பியுங்கள் உங்கள் பயம் எங்கோ போய்விடும்.


மேடையில் பேசும்பொழுது நீண்ட வசனங்களை நீக்கி, சிறுசிறு வசனங்களாக ஆக்கி அழுத்தமாக சொல்ல வேண்டியதை அழுத்திக் கூறியும், முக்கியமானவற்றை இரு தடவைகள் கூறியும் பேசுங்கள். எப்பொழுதும் பார்வையாளர்களுடன் ஆன பார்வை நம்மில் இருந்து விலகி போகாதபடி கவனித்துக் கொள்ளுங்கள். கீழ் உதட்டை கடித்தல், தும்முதல் போன்ற கெட்ட சுபாவத்தை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுங்கள்.


எமது குரல் ஓசை பிறருக்கு எவ்வாறு உள்ளது, நாம் பேசும் பொழுது எமது முகாம் பிறருக்குத் எவ்வாறு தென்படுகின்றது என்பது பெரும்பாலும் எமக்குத் தெரிவதில்லை. எனவே நீங்கள் மேடை பயிற்சிக்கு பயிற்சி செய்யும் வேலையில் உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்து அவர்கள் முன் பேசி பயிற்சி கொள்ளுங்கள். அனைவருக்கும் விமர்சனங்களை கேட்டு உங்களை நீங்களே திருத்தம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சமுதாயத்தில் தலைசிறந்த பெரும் புள்ளியாக பிரபலமடைய வாய்ப்புக்கள் உண்டாகும்.


உங்களுடைய குரலோசையே நீங்கள் பிரபலம் அடைவதற்கு ஏணிப்படி அதை சீராக கையாண்டால் நீங்கள் உச்சத்தை தொடலாம்!


# Thank You #

கருத்துரையிடுக

0 கருத்துகள்